clixsense

Friday, 6 July 2018

JOTHIDAM ORU PARVAI

...அண்ணாமலையார் துணை ...


ஜோதிடத்தை அறியும் போதே அது உன் உண்மையா இல்லை பொய்யா என்று சந்தேக கண்ணோடு தான் அறிகின்றோம்.

ஜோதிடம் என்பது அறிவியல் சார்ந்ததா அல்லது ஆன்மிகம் சார்ந்ததா என்ற ஒரு சந்தேகமும் உண்டு.

ஜோதிடம் பரம்பரை சார்ந்தவர்களுக்கே பலிதம் உண்டாகும் என்பது ஒரு சாரர் கருத்து. கடவுள் அருள் உள்ளவர்களுக்கே பலிதம் உண்டாகும் என்பது ஒரு சாரர்  கருத்து.

ஆகவே எப்படி பார்த்தாலும் ஜோதிடத்தின் அறிமுகமே ஒரு சந்தேக கண்ணோடுதான் ஆரம்பம் ஆகின்றது.

ஜோதிடம் அறிவியல் சார்ந்தது என்றால் உலக மக்கள் அனைவரும் தங்களின் எதிர் காலத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஆன்மிகம் சார்ந்த விஷயம் என்றால் முக்கால்வாசி மக்களுக்கு ஒரு துளிகூட நல்லதே நடக்காது.(ஏனென்றால் முக்கால்வாசி நபர்கள் பெயருக்குத்தான் ஆன்மிகத்தை சார்ந்து இருக்கிறார்கள் )
எனவே ஜோதிடம் ஆன்மிகம் மற்றும் அறிவியலின் கலப்பே ஆகும் என்று நான் நம்புகின்றேன். அவரவர் கண்ணோட்டத்தில் எப்படியும் எடுத்து கொள்ளலாம்.

அதே போல பரம்பரை சார்ந்தவர்களாக இருந்தாலும் கடவுள் அருள் இருந்தால் மட்டுமே வாக்கு பலிதம் உண்டாகும் என்பது என் கருத்தாகும்.(ஏனென்றால் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கூட கடவுளால் படைக்கப்பட்டவர்களே கடவுள் இல்லை என்று அவர்கள் சொல்வதும் கடவுளின் சித்தமே)

எப்படி ஆயினும் ஜோதிடம் மக்களின் மனதில் ஒரு ஒளியே .












Tuesday, 3 July 2018

kadavul thunai

             தெய்வங்கள் துணை  
 மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.
 அதாவது கருவில் இருந்து நம்மை சுமந்து பெற்ற தாய் நம் முதல் தெய்வம்,

நமக்கு உயிர் தந்து உலகத்தை அறிமுகம் செய்து வைக்கும் தந்தை இரண்டாவது தெய்வம். 

தந்தை அறிமுகம் செய்த உலகில் நமக்கு வேண்டிய அறிவை தந்து தன்னை விட தன்  மாணவன் பெயர் பெயர் பெற வேண்டும் என்று நினைக்கும் குரு மூன்றாவது தெய்வம். 

இந்த மூன்று தெய்வங்களும் சேர்ந்து நமக்கு பின் ஒரு வழிக்காட்டி வேண்டும் என்று அமைத்த தெய்வங்கள் ஆலயங்களில் உள்ளன. 

அந்த மாதாவின் வடிவான பராசக்தி அருளாளும், தந்தையின் உருவான  பரசிவன் ஆசியினாலும், தவறினை சுட்டி காட்டும் குருவின் குருவான முருகன் துணையோடும், இவர்களை  அடைய  வழி காட்டும் வினைகளை  அறுக்கும் விநாயகன் பாதம் தொட்டு என்னுடைய பதிவினை தொடங்குகிறேன்.

கடல் போன்ற ஜோதிடத்தில் கரை கடக்க  நான் விரும்பவில்லை, கரையில் இருந்து அதன் அழகை ரசிக்க விரும்புகின்றேன்.

Sunday, 1 July 2018

TAMIL JOTHIDAM ORU ARIMUKAM

   அண்ணாமலையார் துணை 

கலைகளின் பிறப்பிடம் நம் நாடு என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. நம் நாட்டில் தோன்றிய பாரம்பரியமான கலைகள் பல அவற்றுள் ஒரு முக்கியமான கலையாக மக்கள் பார்வையில் இருப்பது ஜோதிட கலையே அந்த கலையினை பற்றி இங்கு காண்போம்.

ஒரு கடல் போன்றது ஜோதிடம் அதில் மீன்களை பிடிப்பதும், பயணம் போவதும், குளித்து கும்மாளம் போடுவதும், நம் கைகளில் தான் உள்ளது. தவறாக ஜோதிடத்தை பயன்படுத்துவோர் (ஜோதிட) கடலுக்குள் மூழ்கி காணாமல் போவதும் உண்டு.கரை பக்கம் போக கூட கடவுள் கருணை காட்டாமல் இருப்பதும் உண்டு.


தான் கற்றது அதிகம் எனவும்,அனைத்தையும் கற்று விட்டோம் என்று நினைப்பதும் தான் ஜோதிடர் தவறாக காரணம்.
 ஜோதிடர்கள் மேலும் தவறு சொல்ல முடியாது ஏன் எனில் அவர்களுக்கு ஆண்டவன் அளித்த சிந்தனை திறன் அவ்வளவுதான்.

JOTHIDAM ORU PARVAI

...அண்ணாமலையார் துணை ... ஜோதிடத்தை அறியும் போதே அது உன் உண்மையா இல்லை பொய்யா என்று சந்தேக கண்ணோடு தான் அறிகின்றோம். ஜோதிடம் என்ப...