தெய்வங்கள் துணை
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.
அதாவது கருவில் இருந்து நம்மை சுமந்து பெற்ற தாய் நம் முதல் தெய்வம்,
நமக்கு உயிர் தந்து உலகத்தை அறிமுகம் செய்து வைக்கும் தந்தை இரண்டாவது தெய்வம்.
தந்தை அறிமுகம் செய்த உலகில் நமக்கு வேண்டிய அறிவை தந்து தன்னை விட தன் மாணவன் பெயர் பெயர் பெற வேண்டும் என்று நினைக்கும் குரு மூன்றாவது தெய்வம்.
இந்த மூன்று தெய்வங்களும் சேர்ந்து நமக்கு பின் ஒரு வழிக்காட்டி வேண்டும் என்று அமைத்த தெய்வங்கள் ஆலயங்களில் உள்ளன.
அந்த மாதாவின் வடிவான பராசக்தி அருளாளும், தந்தையின் உருவான பரசிவன் ஆசியினாலும், தவறினை சுட்டி காட்டும் குருவின் குருவான முருகன் துணையோடும், இவர்களை அடைய வழி காட்டும் வினைகளை அறுக்கும் விநாயகன் பாதம் தொட்டு என்னுடைய பதிவினை தொடங்குகிறேன்.
கடல் போன்ற ஜோதிடத்தில் கரை கடக்க நான் விரும்பவில்லை, கரையில் இருந்து அதன் அழகை ரசிக்க விரும்புகின்றேன்.

No comments:
Post a Comment